இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் முதலிடத்தில் TikTok !

App Store-ரிலும், Google Play-விலும் உலகளவில் ஃபேஸ்புக் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்து TikTok.

இந்திய சீன எல்லை பிரச்சினை காரணமாக இந்தியாவில் டிக் டாக் செயலி இந்திய அரசு தடை விதித்தது. இதன்காரணமாக டிக் டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்க நாட்டிலும் இந்த செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள் இந்தியாவில் TikTok செயலிக்கு இந்திய அரசுதடை விதித்தது,  அதைத்தொடர்ந்து அமெரிக்க அரசும் TikTok செயலியை தடை செய்யப் போவதாக அறிவித்தது. இதன் காரணமாக டிக் டாக் செயலியை வாங்க பல அமெரிக்க நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார்கள். 


இந்த சூழ்நிலையிலும் சமூக வீடியோ செயலியான டிக்டோக் (TikTok) App Store-ரிலும், Google Play-விலும் உலகளவில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் பதிவிறக்கங்கள் செய்த சமூக வீடியோ செயலிகளுக்கான பட்டியலில் டிக் டாக் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த தகவலை மொபைல் உளவுத்துறை நிறுவனமான சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது.