ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் !

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ஒன்பிளஸ் நிறுவனம் மலிவான விலைக்கு ஒன்பிளஸ்  நார்டு CE 5ஜி என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் Blue Void, Charkoal Ink, Silver Ray ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும்இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுப்பதற்கு 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

Also Read : OnePlus Nord CE 5G – Full phone specifications

ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி  ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RAM StoragePriceBuy
6GB128GBRs. 22,999amazon
8GB128GBRs. 24,999amazon
12GB256GBRs. 27,999amazon