விரைவில் Infinix நிறுவனம் AMOLED Display மொபைல்களை அறிமுகம் செய்கிறது !

ஹாங்காங் நாட்டை சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம் மிக விரைவில் இந்திய சந்தையில் மிக குறைவான விலைக்கு AMOLED Display மொபைல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள். இதைப் பற்றின தகவல்களை நிறுவனமே சூசகமாக தன்னுடைய சமூக வலைத்தளம் மூலமாக கூறியுள்ளார்கள்.

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 15000 மற்றும் 10,000 பட்ஜெட்டில் எக்கச்சக்க ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். இவர்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் போன்கள் ரெட்மி,ரியல்மி விவோ சாம்ஸங் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கின்றது.

ஆனால் இவர்கள் அறிமுகம் செய்யும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் IPS LCD டிஸ்ப்ளே தான் இதுவரைக்கும் கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார்கள் அதாவது 60Hz AMOLED Display அல்லது 120Hz LCD Display இதில் எந்த டிஸ்ப்ளே உங்கள் ஸ்மார்ட் போன்களில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் இதற்கு பெரும்பாலான நபர்கள் 60Hz AMOLED Display இருக்க வேண்டுமென்று வாக்களித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக வரும் மாதங்களில் மிக விரைவில் AMOLED Display மொபைல்களை இன்பினிக்ஸ் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.