கொரோனா தடுப்பூசி போட்டபின் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்..

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் என்பது இந்திய அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். நீங்கள் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட நபர் என்பதை காட்ட இந்த சான்றிதழ் உங்களுக்கு உதவும்.
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு பிறகு ஆதார் அட்டையில் பதிவு செய்த உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு Aarogya Setu என்ற செயலியை உங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து மிக எளிதாக கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Aarogya Setu என்ற செயலியை பயன்படுத்தி எவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டபின் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது என்பதைப் பற்றி கீழே உள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.