வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வங்கி கணக்கை நீங்கள் கையாள இண்டர்நெட் பேங்கிங் தேவைப்படுகிறது இந்த சேவை மூலமாக பண பரிமாற்றம், புதிய ATM Card -க்கு Apply செய்தல், மொபைல் எண்ணை மாற்றுதல், Recurring Deposit மற்றும் Fixed Deposit கணக்கினை திறத்தல் இதுபோன்ற பல வசதிகளை பெறமுடியும்.
இந்த பதிவில் எஸ்பிஐ இண்டர்நெட் பேங்கிங் எவ்வாறு துவங்குவது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
எஸ்பிஐ இண்டர்நெட் பேங்கிங் எவ்வாறு துவங்குவது ?
SBI Internet Banking Registration Tamil
பின்வரும் செயல்முறையை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியில் Internet Banking Service -யை மிக எளிதாக Open செய்யலாம்.
Also Read : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பேலன்ஸ் என்கொயரி நம்பர்
Step 1: முதலில் https://retail.onlinesbi.com/retail/newuserreg.htm என்ற SBI-ன் அதிகாரப்பூர்வ இணையவங்கி வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உள்ள New User என்பதை Click செய்ய வேண்டும். அதன் பிறகு கீழே இருக்கும் Next என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
Step 2: தற்போது வேறு ஒரு இணைய பக்கம் ஓபன் ஆகும் அதில் Account Number, CIF Number,Branch Code வங்கியில் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
Step 3: Facility Required என்ற இடத்தில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP Number வரும். அதை பார்த்து பதிவு செய்த பிறகு Confirm என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்,
Step 5: மறுபடியும் ஒரு இணைய பக்கம் உங்களுக்கு ஓபன் ஆகும் அதில் I have ATM Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால்தான் உங்களுடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய முடியும்.
Step 6: அதன் பிறகு உங்களின் ATM Card குறித்த தகவல்களை இதில் நிரப்ப வேண்டும்.
Step 7: உங்களின் SBI Internet Banking சேவையை Open செய்வதற்கான Username மற்றும் Password போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
Step 8: Password-யை கொடுத்தபின்பு i accept the Terms and Conditions என்பதை டிக் செய்து Submit-யை அழுத்த வேண்டும்.
உங்கள் SBI Internet Banking சேவையை Open செய்துவிட்டீர்கள் !!!!
Also Read : எஸ்பிஐ சிடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி ?