புதிய கனரா வங்கி ஏடிஎம் கார்டை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது மற்றும் புதிய PIN நம்பரை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி பார்க்கலாம்..
கனரா வங்கி டெபிட் கார்டை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது ?
கனரா வங்கியின் புதிய ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்து புதிய PIN நம்பரை Set செய்வதற்கு உங்கள் கனரா வங்கியின் அக்கௌன்ட் நம்பர் மற்றும் அந்த வங்கிக் கணக்கிற்கு நீங்கள் எந்த மொபைல் நம்பரை கொடுத்தீர்களோ அந்த மொபைல் நம்பர் மற்றும் அந்த மொபைலை உங்கள் அருகில் இருக்கும் கனரா வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லவும்.
- கனரா வங்கி ஏடிஎம்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடவும் மற்றும் உங்கள் டெபிட் கார்டை இயந்திரத்தில் செருகவும்.
- மொழியைத் தேர்ந்தெடுத்து, “GREEN PIN / FORGOT PIN” >>> என கிடைக்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- Generate OTP என கிடைக்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்கள் வங்கி கணக்கு எண்ணை Enterசெய்யவும். அதன் பிறகு நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும் அதை பார்த்து Enter செய்யவும்.
- OTP ஐ உள்ளிட்டு, உங்கள் டெபிட் கார்டுக்கு உங்களுக்கு விருப்பமான 4 இலக்க PIN தேர்வு செய்யவும்.
- PIN-னை மீண்டும் உள்ளிடவும், இறுதியில் Submit பொத்தானைக் கிளிக் செய்யவும் மற்றும் உங்கள் பணி முடிந்தது.