ரூபாய் 3 ஆயிரம் விலைக்கு 4ஜி மொபைல் ! நோக்கியா 215 4G மொபைலின் விமர்சனம்

நோக்கியா நிறுவனம் வெறும் 3 ஆயிரம் விலைக்கு  இரண்டு 4G  சிம் கார்ட் போட்டு பயன்படுத்தும் Nokia 215 4G என்கின்ற மொபைலை விற்பனை செய்து வருகிறது இதன் முழு விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ டச் மொபைல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தாலும் பட்டன் மொபைல்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பட்டன் மொபைல்கள் என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நோக்கியா மொபைல்கள் தான் ஞாபகம் வரும்.

குறைவான விலைக்கு எத்தனையோ பட்டன் மொபைல் இந்திய சந்தையில் இருந்தாலும் அதில் 4G வசதி பெரும்பாலும் இல்லை. ஆனால் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோக்கியா 215 4G என்கின்ற மொபைலில் இரண்டு 4G சிம் கார்டுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நோக்கியா 215 4G மொபைல் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டார்ச் லைட் மற்றும் ப்ளூடூத் ஆதரவுடன் வருகின்றன.

இந்த மொபைல் போன்களில் பீச்சர் மொபைல்களின் பிரதானமாக இருக்கும் பிஸிக்கல் T9 கீபோர்ட் உங்களுக்கு கிடைக்கிறது. இதன் ஸ்டோரேஜும் விரிவாக்கக்கூடியது (32 ஜிபி வரை).

Nokia 215 4G

Display Size2.4 inches
Weight90.3 g
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
*Dual SIM 4G
OSSeries 30+
BATTERY1150 mAh, removable

ரூபாய் 3 ஆயிரம் விலைக்கு தரமான பட்டன் மொபைல் அதுவும் இரண்டு 4G சிம் கார்ட் பயன்படுத்தும் அளவிற்கு வாங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த மொபைல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நோக்கியா 215 4G மொபைல் இன் இந்திய விலை :