இரவு நேரத்தில் இன்டர்நெட் சேவை இலவசம் ! வோடபோன் ஐடியா(VI) அதிரடி சலுகை !

பயனாளர்களை தக்க வைக்க வோடாபோன் ஐடியா(VI) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் அதிவேக இணைய சேவையை இரவு நேரங்களில் இலவசமாக கொடுக்கப் போவதாக தற்போது அறிவித்துள்ளார்கள் இது வோடாபோன் ஐடியா(VI)  வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் அதிவேக இணைய சேவையை வோடாபோன் ஐடியா(VI) வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும், ரூ.249 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையிலான ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வுசெய்யும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் புதிய திட்டத்தைப் பற்றி கருத்து கூறிய வோடபோன் ஐடியா(VI) நிறுவனம் கடந்த சில நாட்களாகவே பயனாளர்களின் இணைய பயன்பாட்டை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் இரவு நேரங்களில் பலர் OTT இயங்குதளங்களில் வீடியோக்களை அதிகம் பார்ப்பது கண்டறிந்துள்ளது இதற்கு ஏற்றவாறு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக வோடாபோன் ஐடியா(VI)  நிறுவனம் கூறியுள்ளது.