சாம்சங் கேலக்ஸி M11 மொபைல் விலை குறைந்தது !

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி M11 மாடல் மீது விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M11 என்கின்ற மொபைலை அறிமுகம்  செய்திருந்தார்கள். இப்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 11 விலை ரூ .2000 குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.12,999 க்கு அறிமுகப்படுத்தியது, இப்போது விலை குறைப்புக்குப் பிறகு இது ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read : சாம்சங் கேலக்ஸி M11 விலை

இந்த விலை குறைப்பு பற்றி நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் பல்வேறு சில்லரை விற்பனை கடைகளில் சாம்சங் கேலக்ஸி M11 மொபைலின் விலை குறைந்துள்ளது. ஆனால் அமேசான் மற்றும் Flipkart போன்ற e-commerce இணையதளங்களில் விலையில் எந்த ஒரு மாற்றமும் இதுவரைக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது