சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் !

ரூ.15,000 விலைக்கு கீழ் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி F22 என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம் .

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் டெனிம் ப்ளூ மற்றும் டெனிம் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது ஜூலை 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமராவும் இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ளது.

Also Read : Samsung Galaxy F22 – Full phone specifications

சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி F2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.

Also Read : இனி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியாது !