இன்ஸ்டாகிராம் செயலியை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சிகரமாக இருக்கலாம். ஆம் இனி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியாது !! ஏன் தெரியுமா?
இளைஞர்கள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம்செயலியை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதற்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
சமீபகாலமாக “ஷார்ட் வீடியோ” வலைத்தளங்கள் மற்றும் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளார்கள். இதன் காரணமாக இன்ஸ்டகிரம் Reels வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்ட பேஸ்புக் நிறுவனம் தனக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை முழுமையான வீடியோ தளமாக மாறுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் புகைப்படங்கள் பகிரக்கூடிய தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது. இந்த தகவலை இன்ஸ்டாகிராம் தலைவராக இருக்கும் ஆடம் மொசோரி அதிகாரபூர்வமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Also Read : எப்படி Instagram- ல் அதிக நபர்களை UnFollow செய்வது ?