ஒப்போ மொபைல்களின் விலை அதிரடி உயர்வு !

இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை சற்று அதிகரித்துள்ளது என்னென்ன மாடல்களுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தங்களின் ஸ்மார்ட் போன்களின் விலையை ரூ.1000 வரை அதிகரித்து உள்ளார்கள். எதன் காரணமாக இந்த விலை உயர்வு என்பதைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் ஒப்போ நிறுவனம் இதுவரைக்கும் வெளியிடவில்லை என்றாலும்  சந்தையில் சிப்செட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

எந்தெந்த ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பதை பற்றி பார்க்கலாம்..

மொபைல் மாடல்பழைய விலை புதிய விலை
Oppo F19 6GB RAM variantRs. 17,990Rs. 18,990
Oppo A53s 5G 8GB variant Rs. 16,990 Rs. 17,990 
Oppo A15 3GB variant Rs. 9,990,Rs. 10,990
Oppo A15s Rs. 11,490Rs. 12,490