160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு ? பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் !

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி பற்றி பார்க்கலாம்.. 

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது நாடு முழுவதும் இருக்கும் அனைத்து வட்டங்களில் கிடைக்கின்றது.  இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஆனது 160 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது

பிஎஸ்என்எல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் & வேலிடிட்டி:

பிஎஸ்என்எல்லில் இருந்து வரும் ரூ.699 ப்ரீபெய்ட் வவுச்சர் ஆனது பயனர்களுக்கு 0.5 ஜிபி அளவிலான தினசரி FUP டேட்டா நன்மையை வழங்குகிறது.குறிப்பிட்ட வரம்பை மீறிய பின்னர் இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக (நாள் முழுவதும்) குறையும்.

மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், மற்றும் எந்த FUP கட்டுப்பாடுகளும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளும் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும்.

இந்த ரீசார்ஜ் திட்டத்தில் மிகக் குறைவான டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது மேலும் இந்த திட்டம் அதிகம் மொபைல் அழைப்புகள் பேசும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கின்றது.