மிகக் குறைவான விலையில் Realme C20 அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் Realme C20 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்..

ரியல்மி நிறுவனம் தனது C சீரிஸில் Realme C20 என்கின்ற மொபைலை வியட்நாம் நாட்டில் அறிமுகம் செய்துள்ளார்கள். இது 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme C12  மற்றும் Realme C15 க்குப் பிறகு அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, மீடியாடெக் ஹீலியோ ஜி 35 SoC, 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 8 எம்பி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் முன் பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படுகிறது.

ரியல்மி C20 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

ரியல்மி C20 மொபைல் வியட்நாம் நாட்டில் VND 2,490,000 (இந்திய மதிப்பு படி Rs. 7,800) க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.