ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8A மொபைல்களுக்கு MIUI 12 ஸ்டேபிள் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது..
சியோமி இந்தியாவில் தனது ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ ஸ்மார்ட்போன்களுக்கு லேட்டஸ்ட் MIUI 12 ஸ்டேபிள் அப்பேட்டை வெளியிட துவங்கியுள்ளது. இந்த அப்டேட் ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் உடன் புதிய மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட MIUI 12 யூஸர் இன்டர்பேஸ் உடன் வருகிறது..
ரெட்மி 8A ஸ்மார்ட்போனுக்கு MIUI 12 அப்டேட் ஆனது MIUI V12.0.1.0.QCPINXM வெர்ஷனின் உடன் வருகிறது, அதே நேரத்தில் ரெட்மி 8 ஸ்மார்ட்போனுக்கு MIUI 12 அப்டேட் ஆனது V12.0.1.0.QCNINXM வெர்ஷனின் கீழ் வருகிறது. புதுப்பித்தலுக்குப் பிறகு, இரண்டு சாதனங்களும் இன்னும் Android 10 OS இல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8a மொபைல் வைத்திருந்தால், MIUI 12 ஸ்டேபிள் அப்டேட்டை பெறுவீர்கள். இப்போதைக்கு Stable Beta stage-ல் மட்டுமே உள்ளது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இந்தப் புதிய அப்டேட்டை பெறுகிறார்கள். இது பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.