POCO M3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு ! போக்கோ M3 என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் ?

போக்கோ நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் மொபைலான போக்கோ M3 மாடலை வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது…

போக்கோ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் போக்கோ M3 மொபைலை ஏற்கனவே அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த மொபைல் இந்தியாவில் எப்பொழுது அறிமுகம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் போக்கோ M3 மொபைலின் வெளியீட்டு தேதியை ட்விட்டரில் ஒரு டீஸர் வீடியோ மூலமாக அறிவித்துள்ளார்கள்.

இந்த மொபைல் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்திய சந்தையில் வெளியாக இருக்கின்றது. இந்தியாவில் செப்டம்பர் 2020 இல் POCO X3 அறிமுகத்திற்குப் பிறகு, போக்கோ நிறுவனம் போக்கோ M3 மொபைலை அறிமுகம் செய்கின்றது. 

ரியல்மி நிறுவனம் பிப்ரவரி 4-ஆம் தேதி Realme X7 சிரீஸ் மொபைல்களை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது இதற்கு இரண்டுநாள் முன்பதாகவே போக்கோ நிறுவனம் போக்கோ M3 மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கின்றது. 

இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் தெரியவரும், ஆனால் அறிமுகத்திற்கு முன்னதாக அதிக டீஸர்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

போக்கோ M3 மொபைலின் இந்திய விலை (expected)

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.11,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடலானது சுமார் ரூ.12,500 என்கிற விலைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.