Poco பிராண்டு தனது புதிய POCO M3 மொபைலை வருகிற நவம்பர் 24ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சில தினங்களாகவே Poco நிறுவனம் புதிய மொபைலை சந்தையில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. கடந்த ஆறு மாதத்தில் போக்கோ நிறுவனம் POCO M2, POCO M2 Pro, POCO C3, POCO X3 மற்றும் POCO X3 NFC ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த சாதனங்களில், POCO X3 NFC மட்டுமே உலகளாவிய சந்தைகளில் கிடைக்கிறது.
இந்நிலையில் வருகிற நவம்பர் 24ஆம் தேதி போக்கோ எம் 3 என்கின்ற புதிய ஸ்மார்ட்போனை உலகச் சந்தையில் அறிமுகம் செய்து இருக்கின்றார்கள். உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முதல் POCO M தொடர் சாதனமாக POCO M3 என்பது குறிப்பிடத்தக்கது..
போக்கோ எம் 3 குறித்த சில விரிவான தகவல்களை பெற நாம் இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.
I don’t know about you, but I truly miss the feeling of waiting for a new POCO to be revealed. 🙌
— POCO (@POCOGlobal) November 17, 2020
Introducing POCO M3, Our MOST ???? yet! 😏#POCOM3 Is #MoreThanYouExpect pic.twitter.com/pQKQoGbFSe