Honor பிராண்டை விற்பனை செய்கின்றது Huawei !

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹவாய் தனது ஹானர் பிராண்டை விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சீனாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்கின்றது. 

ஏற்கனவே சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களுடைய   தகவல்களை  திருடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க நாட்டில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தற்போது அமெரிக்க நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஹானர் பிராண்டை விற்கும் முடிவை ஹூவாய் எடுத்திருக்கலாம் என்று தெரிகின்றது.

ஹானரின் தயாரிப்புகள் ஹவாய் தொழில்நுட்பத்தை பெரிதும் நம்பியுள்ளன, எனவே ஹவாய் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் இந்த பிராண்ட் பாதிக்கப்பட்டது. 

பட்ஜெட் மற்றும் Mid-Rang விலையில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஹானர் பிராண்டை ஹவாய் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  Honor பிராண்டை விற்பனை செய்த பிறகு பிளாக்ஷிப்  ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த ஹவாய் திட்டமிட்டுள்ளது.