வரவிருக்கும் போகோ ஸ்மார்ட்போன் Snapdragon 662 SoC – யில் இயங்கக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது..
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாகவே அடுத்து அறிமுகம் செய்ய இருக்கும் POCO ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகி வருகிறது. EEC சான்றிதழ் வலைத்தளம் மற்றும் IMDA சான்றிதழ் வலைத்தளத்தில் M2010J19CG மாதிரி எண்ணைக் கொண்ட மொபைல் பற்றிய தகவல்களை பார்க்க முடிந்தது ஆனால் இதை பற்றின வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
தற்போது அதே மாதிரி எண்ணை Geekbench தரவுத்தள இணையதளத்தில் கண்டறிந்துள்ளோம், வெளியாகியிருக்கும் இந்தப் புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது வர இருக்கும் POCO மொபைல் 4GB Ram மாடலில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தலாம், அதேபோல் GPU அட்ரினோ 610 ஆக இருக்கும் என்று குறியீடு வெளிப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 662 SoC உடன் வருகிறது.
ரெட்மி 10 சீனாவில் வருகிற நவம்பர் 24ஆம் தேதி அறிமுகம் செய்வார்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியது. அதே ரெட்மி 10 மொபைல் தான் இந்தியாவில் அடுத்த POCO மொபைல் ஆக அறிமுகமாகும் என்று யூகிக்க முடிகின்றது.
Snapdragon 662 SoC உடன் வருகிறது அடுத்த POCO மொபைல் !
— Red Tech Tamizha (@Redtechtamizha) November 17, 2020
Via :https://t.co/g5y8H2SjhM#POCO #Xiaomi #Redmi #Techleaks pic.twitter.com/Srqxj56Mnm