ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்கள் அதன் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் இதன் காரணமாக திட்டங்களின் விலைகள் கூடிய விரைவில் உயரும் என கூறப்படுகின்றது.
முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (VI) அதன் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் இதன் காரணமாக 2020 இறுதிக்குள் அல்லது 2021 இன் தொடக்கத்தில் அதன் கட்டணங்களை 15-20 சதவீதம் உயரும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
வோடபோன் ஐடியா (VI) நிறுவனம் வருகிறது டிசம்பர் மாதத்திற்குள் இந்த விலை உயர்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதன்பிறகு ஏர்டெல் நிறுவனமும் இதை பின்பற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
செப்டம்பர் காலாண்டின் இறுதியில் ஒரு பயனருக்கு Vi இன் சராசரி வருவாய் ரூ 119 என்று பின்தங்கியிருக்கிறது ,பாரதி ஏர்டெல் ரூ. 162 மற்றும் ஜியோ ரூ. 145 என்கிற மதிப்பையும் கொண்டுள்ளன.
சமீபத்தில் Vi நிறுவனத்தின் MD ஆன ரவீந்தர் தக்கர் கூறுகையில் இப்போதைய கட்டண விகிதங்கள் “நீடிக்க முடியாதவை” என்றும், அவற்றை அதிகரிக்கும் முதல் நிறுவனமாக இருப்பதில் எந்த “வெட்கமும் எங்களுக்கு இல்லை என்று கூறினார். அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல் விலைகளை உயர்த்தும் முதல் ஆப்ரேட்டராக ஏர்டெல் இருக்காது, அதேசமயத்தில் தற்போதைய கட்டண விகிதங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஏர்டெல் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.