Redmi Note 9 5G நவம்பர் 24 அறிமுகம் செய்யப்படுகின்றது ?

சியோமி நிறுவனம் இந்த வாரத்தில் ரெட்மி நோட் 9 5 ஜி தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Redmi Note 9 5G மற்றும் Redmi Note 9 Pro 5G மொபைல் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் மற்றும் குவால்காம் பிராசஸர் உடன் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

சமீபத்திய leaks அடிப்படையில் Redmi Note 9 5G மொபைல் Dimensity 800U  பிராசஸர் உடன் வருகிறது, இதன் விலை இந்திய மதிப்பில் 11,300 (999 Yuan) இருக்கும் என்று தெரிகிறது.

அதேபோல் இந்த சீரிஸில் மற்றொரு மொபைல்  ஆக Redmi Note 9 Pro 5G மொபைல் Snapdragon 750G பிராசஸர் உடன் வருகிறது, இதன் விலை இந்திய மதிப்பில் 17,000 (1,499 Yuan) இருக்கும் என்று தெரிகிறது.