இந்திய சந்தைக்கு ஏற்றவாறு “ PUBG Mobile India” என்கின்ற விளையாட்டை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக PUBG தெரிவித்துள்ளது.
PUBG விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி. “ PUBG Mobile India” என்கின்ற ஒரு புதிய விளையாட்டு மூலம் இந்திய சந்தையில் மீண்டும் வருவதாக PUBG கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
“ PUBG Mobile India” வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்றாலும், நிறுவனம் வெளியிட்ட டீஸர் வீடியோ, PUBG ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும் உள்ளூர் வீடியோ கேம், ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில்களை வளர்ப்பதற்காக இந்தியாவில் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய PUBG கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.