Realme X7 Series இந்தியாவில் எப்பொழுது வெளியாகும் ?

ரியல்மி நிறுவனத்தின் Realme X7 Series ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது..

ரியல்மி நிறுவனம் சீனாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் Realme X7 மற்றும்  Realme X7 Pro என்கின்ற ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5 ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வந்தது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மாதவ் ஷெத் ட்விட்டர் மூலமாக Realme X7 Series ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்வதை உறுதி செய்துள்ளார், Realme X7 Series ஸ்மார்ட்போன்கள் வருகிற 2021 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று தெரியவந்துள்ளது..

இந்தியாவில் Realme X7 Series மொபைலில் எவ்வளவு விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் ? 

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது (CNY 1,799) ரூ.20,300 க்கும், இதன்8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ( CNY 2,399 ) ரூ.27,000 க்கும் அறிமுகமானது

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ  ஸ்மார்ட்போன் சீனாவில் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது (CNY 2,199) ரூ.24,800 க்கும், இதன்8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ( CNY 2,499) ரூ.28,200 க்கும் மற்றும் இதன் டாப் எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது (CNY 3,199) ரூ.36,100 க்கும் அறிமுகமானது.