யூடியூப் சேனல் வருமானம் ? யூடியூப் சேனல் ஆரம்பித்தால் எப்படி வருமானம் கிடைக்கும் !

யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியுமா ! யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் எவ்வளவு வருமானம் சம்பாதிக்கிறார்கள் இவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது அதிலும் இந்தியாவில் ஜியோ நிறுவனம் அன்லிமிட்டட் இணைய சேவையை வழங்க துவங்கிய பிறகு பல்வேறு நிறுவனங்களும் அன்லிமிட்டட்  இணைய சேவையை வழங்க துவங்கினார்கள் இதன்பிறகு வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் அதிக வளர்ச்சியை பெற்றது.

குறிப்பாக யூட்யூப் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படுவதால் வீடியோவை பதிவேற்றம்  செய்பவர்களுக்கு என்ன லாபம் இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். 

யூடியூப் சேனல் ஆரம்பித்தால் எப்படி வருமானம் கிடைக்கும் !

யூடியூப் சேனலை யார் வேண்டுமானாலும் இலவசமாக ஆரம்பிக்கலாம் இதற்கு ஒரு “Gmail” கணக்கு இருந்தால் மட்டும் போதும். நீங்கள் சேனல் ஆரம்பித்து கடைசி ஒரு வருடத்தில் உங்களுடைய சேனலுக்கு 4,000 மணி நேரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் 1000 நபர்கள் உங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும். இவற்றைச் செய்திருந்தால் யூடியூப் நிறுவனம் உங்கள் சேனலை ஆய்வுசெய்து, பின்னர் தனது யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் கீழ் இணைத்துக்கொள்ளும்

இதற்குப் பின், உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். Monetization மூலம் யூடியூபின் விளம்பரங்கள் உங்கள் வீடியோக்களில் தோன்ற ஆரம்பிக்கும். இவை, கூகுளின் AdSense மூலம் வரும்.

Also Read : Ways to make money in the YouTube Partner Program

யூடியூப் சேனல் வருமானம் ?

உங்கள் யூடியூப் வீடியோ மூலம் கிடைக்கும் வருமானத்தில் 45 சதவிகிதத்தை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 55 சதவிகிதம் காணொளியைப் பதிவேற்றிய சேனலுக்குக் கிடைக்கும்.

யூடியூப் சேனல் வருமானம் அனைத்து சேனலுக்கும் ஒரே மாதிரி இருக்குமா !

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே போல் வருமானம் கிடைப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு நீங்கள் பதிவேற்றம் செய்த யூடியூப் வீடியோவை அமெரிக்க நாட்டை சேர்ந்த நபர்கள் பார்த்தால் அதில் வரும் விளம்பரங்களால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது அதை வீடியோவை நம் நாட்டில் உள்ள நபர்கள் பார்த்தால் நமக்கு வருமானம் சற்று குறைவாக வரும். பார்வையாளர்கள் மற்றும் விளம்பரங்களை பொறுத்து ஒவ்வொரு சேனலில் வருமானம் மாறுபடும். 

முழு விளம்பரத்தையும் பார்த்தால் ஒரு தொகையும், அந்த விளம்பரத்தை க்ளிக் செய்தார்கள் என்றால் ஒரு தொகையும் கிடைக்கும். இது, உங்கள் வீடியோவைப் பார்க்கும் பார்வையாளர்களின் பகுதியைப் பொறுத்து மாறலாம்.