Activate Sbi Atm Card in ATM Machine : புதிதாக வாங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஏடிஎம் அட்டையை எவ்வாறு Activate செய்வது மேலும் ஏடிஎம் அட்டைக்கு புதிய PIN Number-ஐ எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏடிஎம் கார்டை நீங்களே ஆக்டிவேட் செய்வது எப்படி?
புதிதாக பெறப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஏடிஎம் கார்டை இயக்க நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல தேவையில்லை. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஏடிஎம் மையத்திற்குச் சென்று நீங்கள் எளிதாக புதிதாக வாங்கி ஏடிஎம் அட்டையை Activate செய்து புதிய PIN Number-ஐ உருவாக்கலாம்..
Also Read : எஸ்பிஐ சிடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி ? How to Deposit Money in SBI ATM in Tamil
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஏடிஎம் மூலமாக எப்படி ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
- ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டை செருகவும்..
- PIN Generation என்கின்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் 11 இலக்க அக்கவுண்ட் எண்களை பதிவுசெய்யவும்.
- இதனை உறுதி செய்ய ‘Confirm’.என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவுசெய்யவும்.
- இதனை உறுதி செய்ய ‘Confirm’.என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த திரையில் ‘உங்கள் PIN உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு விரைவில் வழங்கப்படும்’ என்ற செய்தியைக் காண்பிக்கும்.
- பின்பு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து டெபிட் கார்டை எடுக்கவும்.
- மறுபடியும் ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டை செருகவும்..
- ‘Banking’ என்கின்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆங்கிலம், இந்தி அல்லது பிராந்திய மொழியை உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும்
- அடுத்த திரையில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்.
- ‘PIN Change’ என்கின்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து, உங்களுக்கு விருப்பமான புதிய நான்கு இலக்க PIN ஐ உள்ளிட்டு அதை மீண்டும் உறுதிப்படுத்தவும்
- அதன் பிறகு, ‘உங்கள் PIN வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது’ என்று ஒரு செய்தியைப் பெறுவீர்கள்
Also Read : SBI Bank Balance Check: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பேலன்ஸ் என்கொயரி நம்பர்
How to Activate SBI ATM Card with ATM Machine in Tamil | SBI ATM Card Activation Process in Tamil
Also Read : SBI Internet Banking Registration Tamil : எஸ்பிஐ இண்டர்நெட் பேங்கிங் எவ்வாறு துவங்குவது ?