காணாமல் போன மொபைலை கண்டுபிடிப்பது எப்படி !

காணாமல் போன மொபைலை ஒரு அப்ளிகேஷன் மூலமாக மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Google Find My Device என்கின்ற அப்ளிகேஷன் கண்டிப்பாக உங்கள் மொபைலில்  இருக்க வேண்டும். உங்கள் மொபைலை காணவில்லை என்றால் இதன் மூலமாக மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். கீழே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி உங்களின் தொலைந்த ஸ்மார்ட்போனை தேடி கண்டுபிடிக்க முடியும்.

  1. Google Find My Device” என்கின்ற அப்ளிகேஷனை Open செய்யுங்கள் இல்லையென்றால் https://www.google.com/android/find என்கின்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  2. பின்னர் உங்கள் கூகிள் அக்கௌன்ட்டில் உள்ள உங்கள் சாதனத்தை அடையாளம் கண்டு, உங்கள் போனின் மாடலை தேர்வு செய்யுங்கள்.
  3. இதில் உங்களுடைய மொபைல் பற்றிய தகவல்களை உங்களால் பார்க்க முடியும் அதாவது மொபைல் எப்பொழுது கடைசியாக பயன்படுத்தப்பட்டுள்ளது,  மொபைல் மாடல்  போன்ற பல்வேறு தகவல்களை இதில் பார்க்கலாம்.
  4. அதுமட்டுமின்றி கூகிள் ஒரே நேரத்தில் போனின் தோராயமான இருப்பிடத்தை வரைபடத்தில் காண்பிக்கும்.  இதன் மூலமாக தொலைந்து மொபைல் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 
  5. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று பக்கத்தில் உங்கள் மொபைலில் தொலைத்திருந்தால் பிளே சவுண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் போனை ஐந்து நிமிடங்கள் இடைவிடாது ரிங் செய்ய செய்யலாம். இது உங்கள் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் வேலை செய்யும்.
  6. அதேபோன்று தொலைந்து போன மொபைல் இருக்கும் அனைத்து தரவுகளையும்  அளிக்க வேண்டுமென்றால் Erase Device  என்கின்ற அம்சத்தை தேர்வுசெய்யவும்.

இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..