வீட்டிலிருந்தபடியே யூடியூப் சேனல் தொடங்கி வீட்டிலிருந்தே எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வீட்டிலிருந்தபடியே இலவசமாக யூடியூப் சேனலை உருவாக்கி அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும், அதில் உங்கள் சொந்த வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலமாக உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் கிடைக்கும்.
Also Read : யூடியூப் சேனல் ஆரம்பித்தால் எப்படி வருமானம் கிடைக்கும் !
யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி
யூடியூப் சேனல் தொடங்கி வருமானம் ஈட்ட, முதலில் நீங்கள் ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரு கூகுள் அக்கவுன்ட் தொடங்கவேண்டியது அவசியம். Gmail அக்கவுண்ட் தொடங்கிய பின்பு www.youtube.com என்கின்ற இணைய முகவரிக்கு சென்று யூடியூப் சேனலை உருவாக்கிக்கொள்ள முடியும். யூடியூப் சேனலில் youtube account settings-ஐ க்ளிக் செய்தால் Create a New Channel என்று வரும். அதை க்ளிக் செய்து உங்கள் சேனலுக்கு நீங்கள் ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம்.
மேலும் யூடியூப் வீடியோக்களுக்கு Standard License, Creative Common License என இரண்டு விதமான லைசென்ஸ் உண்டு.
Also Read : Best Microphones For YouTube Videos
Standard License
Standard License என்பது நாம் பதிவேற்றும் அனைத்து வீடியோக்களும் நம்முடைய சொந்த வீடியோக்களாக இருக்கவேண்டும். பிறரின் அனுமதி இல்லாமல் அவருடைய வீடியோக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற வீடியோக்களை நம்முடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யக்கூடாது.
Creative Common License
யூடியூப் இல் நாம் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள ஏராளம் வீடியோக்கள் இருக்கின்றது இதற்கு Creative Common License என்று கூறுவார்கள் இவ்வகை வீடியோக்களை நீங்கள் உங்களுடைய சேனலில் பயன்படுத்திக் கொள்ளலாம் உதாரணத்திற்கு Creative Common License வீடியோ ஒன்றை எடுத்து அதில் சில மாற்றங்களை செய்து உங்களுடைய யூடியூப் சேனலில் அப்லோட் செய்து கொள்ளலாம்.
அதேபோன்று Creative Common License முறையில் நீங்கள் உங்களுடைய சேனலில் ஒரு வீடியோவை அப்லோட் செய்தால் அதை பிறர் இலவசமாக டவுன்லோட் செய்து அவருடைய யூடியூப் சேனலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யூட்யூப் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்
விளம்பரம் மூலம் வரும் வருமானத்தில் 45 சதவிகிதத்தை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 55 சதவிகிதம் காணொளியைப் பதிவேற்றிய சேனலுக்குக் கிடைக்கும்.
Also Read : ஒரு வருடத்திற்கு ரூ.185 கோடி சம்பாதிக்கும் 8 வயது சிறுவன்
நம்முடைய யூடியூப் சேனலுக்கு விளம்பரம் வர வேண்டும் என்றால் என்ன தகுதியை பெற வேண்டும் ?
யூடியூப் சேனலை இலவசமாக ஆரம்பித்து விடலாம் என்றாலும் அதில் விளம்பரங்கள் வந்தால்தான் நமக்கு வருமானம் கிடைக்கும். வருமானம் பொருத்தவரைக்கும் கூகுளின் AdSense மூலம் வரும்.
வருமானம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அதாவது உங்களுடைய யூடியூப் சேனல் ஆரம்பித்து கடந்த ஒரு வருடத்தில் உங்கள் சேனல் 4,000 மணி நேரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் 1000 Subscribers சேனலுக்கு இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் யூடியூப் நிறுவனம் உங்கள் சேனலை ஆய்வுசெய்து, பின்னர் தனது யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் கீழ் இணைத்துக்கொள்ளும்.
Also Read : Best Budget Mic for YouTubers