டிக்டாக்-ல் முதலீடு ? ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை!

ByteDance in talks with Reliance Industries Ltd for investment in TikTok

இந்திய அரசாங்கம் 59 சீன  செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது. இதில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய டிக்டாக்  செயலியும் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டது போல் அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

இதன் காரணமாக டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) கலக்கத்தில் இருந்தது. அதையொட்டி டிக் டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்கா நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தனர்.

தற்போது டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் வருவதற்கான வேலையை ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. தற்போது டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ரிலைன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.  

இதுகுறித்து ரிலையன்ஸ், பைட்-டேன்ஸ் மற்றும் டிக்டாக் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.