ரூ.141-க்கு 4ஜி ஜியோ போன் 2 வாங்கலாம் ? ஜியோ அதிரடி சலுகை

Jio Phone 2 Mobile Phone Now available at an EMI of Rs 141 per month

ஜியோ போன் 2 மொபைல் தற்போது ரூ.2,999 ஆக விற்கப்படுகிறது. இந்த மொபைலை ஜியோ நிறுவனம் குறைந்த விலையில்,அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தார்கள்.

இந்த ஜியோ போன் 2  மொபைல் போனில்  4ஜி வசதி உள்ளது. மேலும் கூகுள் மேப், யூடூயூப் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதி என்று நிறைய சேவைகளுடன் இந்த ஜியோ போன் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜியோ போன் 2 மொபைலுக்கு ஜியோ ஒரு அதிரடி சலுகையை வழங்கி உள்ளார்கள். தற்போது .2,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைலை மாதம் ரூ.141 இஎம்ஐ-ல் வாங்கிக் கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இந்த சலுகை கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே கிடைக்கின்றது.