Why is TikTok banned in India? 59 chinese apps banned in india

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இருப்பதால்” சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக் இந்திய அரசு தடை செய்துள்ளது.
குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியும் இதில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு டிக் டாக் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. டிக் டாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி ‘மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்து இருக்கிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக அரசாங்க பங்குதாரர்களை சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக டிக் டாக் தெரிவித்துள்ளது.
— TikTok India (@TikTok_IN) June 30, 2020