டிக் டாக் செயலியை வாங்க பேச்சுவார்த்தை நடத்தும் மைக்ரோசாப்ட்

Is Microsoft going to buy TikTok?
Microsoft confirms plans to buy TikTok

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை சமீபத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக் டாக் செயலியை மத்திய அரசு தடை செய்தார்கள். இந்த நிலையில், அமெரிக்காவிலும் டிக் டாக் செயலியை   தடை விதிக்க அபாயம் ஏற்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் டிக் டாக்  செயலியை விரைவில் அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதையடுத்து மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்-டேன்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது.

ஏற்கனவே டிக்கெட் நிறுவனத்தை அமெரிக்க நாட்டை சேர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல்கள்  வெளியாகின. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவிலும்  டிக் டாக் செயலியை விரைவில் தடை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்பை  மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார். விரைவில்  டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட்க்கு கைமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனினும் இதைப்பற்றிய  அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.