Youtube wants to challenge TikTok : Tech News in Tamil
டிக்டாக் செயலி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த செயலி மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதால் பலரும் இதை விரும்பி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த செயலியை மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்த முக்கிய காரணம் “Short-Video” , இணையத்தில் வீடியோ பார்க்கும் பல்வேறு பயனாளர்கள் குறைந்த நிமிடத்தில் உள்ள வீடியோக்களை தான் பெரும்பாலும் பார்க்கின்றார்கள்.
இதன் காரணமாக தான் டிக்டாக் செயலி மக்கள் மத்தியில் எளிதில் சென்று சேர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த செயலிக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லாசோ மற்றும் ரீல்ஸ் என்ற இரண்டு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்கு அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
தற்போது இந்த போட்டியில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் யூடியூப் வீடியோ பொழுதுபோக்கு தடத்தில் “Short-Video” என்கின்ற புதிய அம்சத்தை அறிமுகம் கூகுள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.