குறைந்த விலையில் 108 மெகாபிக்சல் மொபைல்

Redmi Note 9 Pro comes with 108MP Camera

ரெட்மி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்ற ரெட்மி 9 சீரிஸ் வருகிற மார்ச் 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் Redmi Note 9 மற்றும் Redmi Note 9 Pro என்கின்ற இரு ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 9 ஸ்மார்ட் போன் 10,000 ரூபாய்க்கும், Redmi Note 9 Pro ஸ்மார்ட் போன் 14,999 ரூபாய்க்கும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றது Redmi Note 9 Pro ஸ்மார்ட் போனில் எவ்வளவு மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொடுப்பார்கள் என்பதுதான்.

ஏற்கனவே ரெட்மி நிறுவனம் Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பின்பக்க கேமரா பயன்படுத்தினார்கள், பின்பு கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொடுத்தார்கள். தற்போது அறிமுகம் செய்ய இருக்கும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் கேமரா இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.