கொரோனா வைரஸ் எதிரொலி ரெட்மி எடுத்த அதிரடி முடிவு

Redmi cancels Redmi Note 9 series Online launch event after coronavirus hits India

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த ரெட்மி 9 சீரிஸ் வருகிற 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் ரெட்மி நிறுவனம் மொபைல் போன் அறிமுகத்தை மிக பிரம்மாண்டமாக நடத்துவார்கள்.

ஆனால் தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது இதை கருத்தில் கொண்ட ரெட்மி நிறுவனம் தங்களுடைய பயனாளர்கள் ,பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் இதர செய்தி ஊடகங்கள் அனைவருடைய பாதுகாப்பு கருதி மார்ச் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடக்க இருக்கும் அறிமுக விழாவை ரெட்மி புறக்கணித்துள்ளது.

இதற்கு பதிலாக ரெட்மி நிறுவனம் மார்ச் 12ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் தங்களுடைய சமூக வலைதளம் மற்றும் mi.com என்கின்ற இணையதளத்தில் அறிமுக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ரெட்மி திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.