ரெட்மி நோட் 9 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது

Redmi Note 9 Pro Expected Specs, Price in India

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ரெட்மி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் ரியல்மி இந்தியாவில் வருகிற மார்ச் 5ஆம் தேதி ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 Pro என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

இதன் காரணமாக ரெட்மி 9 சீரிஸ் போன்களை விரைவாக இந்தியாவில் அறிமுகம் செய்ய ரெட்மி திட்டமிட்டுள்ளார்கள். இதன் காரணமாகத்தான் சமீபத்தில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை ரெட்மி குறைத்தார்கள்.

Redmi Note 9 Pro எதிர்பார்க்கும் சிறப்பு அம்சங்கள் ?

Chipset:

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் Helio G90T-இல் அறிமுகம் செய்தார்கள். இந்த முறை பெரும்பாலும் Snapdragon 720G-இல் ரெட்மி நோட் 9 ப்ரோ அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Display:


ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட் போனும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டில் அறிமுகம் செய்வார்கள்.

Cameras:


கேமரா பொருத்த வரைக்கும் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட் போனில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என தெரிகிறது முன்பக்க கேமரா மட்டும் சிறிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Battery:

2020 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் 4500mAh மற்றும் 27W fast charging வசதியுடன் வருகிறது அந்த வரிசையில் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனும் வரலாம் என தெரிகிறது.

Price

ரெட்மி நோட் 9 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆரம்ப விலை 14,999 அல்லது 15,999க்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.