30W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் : Realme 6 series will come with 30w flash charging support

Realme 6 series specs and price in india | Realme 6 Price in India March 2020

ரியல்மி 6 சீரிஸ் மார்ச் 5-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. தற்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

இந்த இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுமே ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 20x ஸூம் மற்றும் 30W Flash Charging போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.

இதன் விலை பொருத்தவரைக்கும் இந்தியாவில் ரியல்மி 6 ப்ரோ 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.13,999 க்கும், ரியல்மி 6 ரூ.9,999 க்கும் அறிமுகம் ஆகும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது இந்த பட்ஜெட் விலையில் சந்தையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பொருத்தவரைக்கும் 10w, 18w Charging வசதியுடன் வருகிறது ஆனால் வர இருக்கும் ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 30W Flash Chargimg வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ரியல்மி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.