1 ஜிபி டேட்டா 35 ரூபாய் ? அதிரடியாக டேட்டா கட்டணங்களை உயர்த்தியது வோடாபோன் ஐடியா

Vodafone Idea Seeks Rs. 35 per GB as Minimum Mobile DataTariff

வோடாபோன் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் செலுத்த வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக வோடபோன் நிறுவனம் தற்போது சிக்கலில் இருக்கின்றது.

இதன் காரணமாக கட்டணங்களை படிப்படியாக உயர்த்திக் கொண்டு வருகிறார்கள். தற்போதைய மொபைல் டேட்டா விலைகள் 1 ஜிபிக்கு ரூ.4 முதல் ரூ5 என்கிற விகிதத்தில் தான் உள்ளது.

இந்தக் கட்டணத்தை வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது உயர்ந்த உள்ளது.. வோடபோன் ஐடியா அதன் மொபைல் தரவுகளுக்கான குறைந்தபட்ச கட்டணங்களை சுமார் 7 மடங்கு உயரத்தவும், அதாவது 1ஜிபி அளவிலான டேட்டாவிற்கு ரூ.35 என்கிற விகிதத்தில் கட்டணம் மற்றும் ஏப்ரல் 1, 2020 முதல் குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ.50 என நிர்ணயித்துள்ளது.

இந்த செய்தி வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.