AGR Payment : Vodafone Idea will close if govt does not provide any relief
இந்தியாவில் ஜியோ வருகைக்கு பின்பு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வோடபோன் ஐடியா இந்நிறுவனம், கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வோடபோன் நிறுவனம் அந்த தொகையை செலுத்தவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
இந்த உத்தரவு காரணமாக வோடபோன் நிறுவனம் தற்போது கடும் நெருக்கடியில் இருக்கின்றது. இந்நிலையில் வோடபோன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வோடபோன் நிறுவனம் கடந்த 10 வருடங்களில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடும் இழப்பை சந்தித்துள்ளது.
இப்படி இருக்கும் நேரத்தில் ஒரே நாளில் அனைத்து தொகையும் செலுத்த வேண்டும் என்றால் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என்ற நிலைதான் வரும் என கூறியுள்ளார்.