இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் : India’s first 5G smartphone

Realme X50 Pro Launch Date in India | Realme X50 Pro 5G India Launch on February 24

Realme நிறுவனம் Realme X50 Pro 5G ஸ்மார்ட்போனை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸின் (MWC) தளங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது . ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த ஆண்டு நடக்க இருந்த MWC ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே VIVO iQoo நிறுவனம் இந்தியாவில் முதல் 5G ஸ்மார்ட்போனை பிப்ரவரி 25 அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது.

இதற்குப் போட்டியாக தற்போது Realme நிறுவனம் Realme X50 Pro 5G ஸ்மார்ட்போனை ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 24 இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். ஒருவழியாக இந்தியாவில் நாங்கள்தான் முதலில் 5G போனை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரை Realme வாங்கப் போகிறார்கள்.