மொபைல் மார்க்கெட்டில் ரியல்மி ராஜா!

Counterpoint Research : India premium smartphone market share -2019

இந்தியாவில் பொருத்தவரைக்கும் பட்ஜெட் விலையில் தான் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் அதிகம் வாங்குகின்றார்கள். இதை குறிவைத்து பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஸ்மார்ட்போன்களை போட்டி போட்டு அறிமுகம் செய்கிறார்கள்.

இதில் தற்போது ரெட்மி மற்றும் ரியல்மி தான் இந்தியாவில் முன்னிலையில் இருக்கின்றார்கள். இந்த இரு நிறுவனங்களும் premium smartphone அறிமுகம் செய்ய ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் இரு நிறுவனங்களும் ஒரு சில Premium ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள்.

சமீபத்திய Counterpoint அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு அடிப்படையில் ரியல்மி நிறுவனம் Premium போன் விற்பனையில் 2 சதவீதம் உள்ளது.

இதையொட்டி இந்த ஆண்டு ரியல்மி சார்பில் பல்வேறு premium ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.