ரியல்மி 6 ப்ரோ எப்படி இருக்கும் ? இது பழசு இல்லை இது புதியது

Realme 6 pro latest update : Release Date, Latest News

ரியல்மி நிறுவனம் நாளை(மார்ச் 5) இந்தியாவில் Realme 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றார்கள். தற்போது இதைப்பற்றி ஒரு சுவாரசிய தகவலை ரியல்மி அறிவித்துள்ளார்கள்.

ஏற்கெனவே ரியல்மி நிறுவனம் அவர்களுடைய Pro சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிக சிறப்பு அம்சங்கள் கொடுத்து குறைவான விலைக்கு அறிமுகம் செய்வார்கள்.

அந்த வரிசையில் Realme 2 Pro, Realme 3 Pro, Realme 5 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தார்கள். தற்போது அறிமுகம் செய்ய இருக்கும் Realme 6 Pro இதைக்காட்டிலும் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Realme 5 Pro மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் தான் Realme 6 Pro என பலரும் பேசி வருகின்றார்கள் இதை கருத்தில் கொண்ட ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கும் Realme 6 Pro “New Pro” வாக இருக்கும் என விளம்பரம் செய்கின்றார்கள்.