மார்ச் 5 அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்கள் : Realme 6, Realme 6 Pro India Launch Date in India

ரியல்மி 6 சீரிஸ் : Realme 6 With 64-Megapixel Quad Camera Setup

Realme 6 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என ஏற்கனவே ரியல்மி உறுதிப்படுத்தியது. இந்நிலையில் தற்போது Realme 6 மற்றும் Realme 6 Pro ஸ்மார்ட்போனை மார்ச் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

ரியல்மி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் ஷெத், இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 64 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க கேமராவில் அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

ரியல்மி 6 தொடரின் ப்ரோ மாடலில் டூயல் செல்பீ கேமரா அமைப்பு இடம்பெறும் என்பதை ரியல்மி வெளியிட்ட புகைப்படம் மூலமாக வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற மார்ச் 5 ஆம் தேதியன்று மதியம் 12:30 க்கு அறிமுகம் ஆகுமென்றும் ரியல்மி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.