2 வாரத்திற்குள் 2,50,000 POCO M3 மொபைல்கள் விற்பனை ! அப்படி என்ன இந்த மொபைலில் இருக்கிறது !

போக்கோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ M3 மொபைல் விற்பனையில் சாதனை படைத்துள்ளது..

பட்ஜெட் விலையில் போக்கோ நிறுவனம் போக்கோ M3 மொபைலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் 150,000 போக்கோ M3 யூனிட்டுகள் விற்கப்பட்டதாக போகோ அறிவித்திருந்தது.


இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் இந்த மொபைலின் இரண்டாம் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்றது. இந்த விற்பனையின் மூலமாக மொத்தமாக 250,000 POCO M3 மொபைல்களை விற்பனை செய்துள்ளதாக போக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மொபைல் விற்பனைக்கு வந்த இரண்டு வாரங்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ M3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை ?

போக்கோ M3 மொபைலின் அடுத்த விற்பனை பிப்ரவரி 23ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகின்றது.

போக்கோ M3 அம்சங்கள் விவரக்குறிப்புகள்:

போக்கோ M3 மொபைல் இந்தியாவில் கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ மற்றும் பவர் பிளாக் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் FHD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 Soc, 6,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. மேலும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலை :

RAM StoragePriceBuy
6GB64GBRs. 10,999Flipkart
6GB128GBRs. 11,999Flipkart