பயமே இல்லாம வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ணலாம்!

Whatsapp messages disappearing feature

வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள் சமிபத்தில் வாட்ஸ் அப் டார்க் மோட் அப்டேட்டை அறிமுகம் செய்தார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு தலைவலியாக இருப்பது வாட்ஸப்பில் நாம் அனுப்பும் சில மெசேஜ்களை நாம் அழிக்க நினைப்போம், அவ்வாறு அழிக்க ஒவ்வொரு நேரமும் அந்த மெசேஜை ஓபன் செய்து அளிப்போம் அல்லது மொத்தமாக அளிப்போம்.

இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் வாட்ஸ்அப் டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் எனும் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். அதாவது நிர்ணயித்த நேரத்திற்குப் பிறகு தானாகவே அழிந்து போகும் மெசேஜ்களுக்கான ஒரு அம்சம் ஆகும்.

தற்போது இது சோதனையில் சில பீட்டா பதிப்புகளில் மட்டும் கிடைக்கின்றது விரைவில் இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.