வாட்ஸ்அப் Group Call அப்டேட் – இனி 8 பேருடன் உரையாடலாம்

Whatsapp Group Call Limit Increase ? WhatsApp set to increase group calling and video calling limits

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிக அளவில் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி வருகின்றார்கள். ஏற்கனவே நம்முடைய தளத்தில் பதிவு செய்தது போன்று வாட்ஸ்அப் தற்போது வீடியோ காலிங் அம்சத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளார்கள்.

வாட்ஸ்அப் செயலியில் இதுவரைக்கும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம்  உயர்த்தி உள்ளது.

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் போது எட்டு பேரை பங்கேற்க செய்யும் அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.  இந்த புதிய அம்சம் மற்ற பயனாளர்களுக்கு மிக விரைவாக அளிக்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.