Now WhatsApp is working on allowing more than 4 people on a group video
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
பல முக்கிய நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவித்துள்ளார்கள். இந்த சமயத்தில் அலுவலகம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு வீடியோ காலிங் அப்ளிகேஷனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
பள்ளி கல்லூரி மாணவர்களும் தங்களுடைய பாடங்களை கற்பதற்காக வீடியோ காலிங் அப்ளிகேஷனை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் ஒரே நேரத்தில் 4 நபர்களை இணைக்கும் வசதி இருக்கின்றது. தற்போது இதை அதிகரிக்க வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.