Zoom App பாதுகாப்பானது இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Zoom app safe or not ? Zoom app is not a secure site home ministry instruction

கொரோனா வைரஸ் காரணமாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்கள். 

 இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் Zoom அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றார்கள் இந்த செயலி மூலமாக காணொலிக் கூட்டம், தனியாக சாட் செய்வது, மெசேஜ் அனுப்புவது, ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த செயலியில் இருப்பதால் மக்களும் விரும்பி பயன்படுத்துகின்றார்கள்.

தற்போது இந்த செயலி பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சில ஹேக்கர்கள் சட்டவிரோதமாக இணைய திருட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுக்க ZOOM செயலியில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. 

இந்த செயலியை பல்வேறு முக்கிய அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இதைப்பற்றி அரசு விளக்கமளித்தனர். Zoom செயலியை தனி நபர்கள், அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உகந்ததல்ல என சைபர் பிரிவு எச்சரித்துள்ளது, இது பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.