விவோ V19 போனின் இந்திய விலை

Vivo V19 price in india 2020 launch date

விவோ நிறுவனம் விவோ வி19 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற மார்ச் 26ஆம் தேதி அறிமுகம் செய்கின்றார்கள். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விவோ வி 19 மொபைலில் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பையும், 32 மெகாபிக்சல் பிரதான செல்பி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள்-கேமராவுக்கான இரட்டை ஹோல்-பஞ்ச் கேமராவில் இந்த மொபைல் வருகிறது.

இந்திய மாடல் 8 ஜிபி ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoC-ஆல் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது ரூ.25,000 ரூபாயில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நம்முடைய தளத்தில் பதிவு செய்ததுபோல் இந்த மொபைல் 22 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய்க்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.