கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்

Microsoft Bing Launches a Coronavirus Tracker

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது, இருந்த போதிலும் பல்வேறு மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு தகவல்களை மக்கள் இணையத்தில் தேடி அறிந்து கொண்டு வருகிறார்கள். இதில் சில உண்மையான செய்திகளும் இருக்கின்றது அதேபோல் சில பொய்யான செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிங் தேடுபொறியில் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான இலவச COVID-19 டிராக்கரை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் bing.com/covid -ல் கிடைக்கிறது. இதில் உலக வரைபடம் இருக்கும் எந்தெந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்றது எத்தனை நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள், இத்தனை நபர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு உள்ளார்கள் மற்றும் எத்தனை நபர்கள் இறந்து உள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தை இதில் காணலாம்.

இதுபோல் பல்வேறு இணையத்தளங்கள் இருந்தாலும், இதில் உள்ள தகவல்கள் உண்மையான தகவல் எனக்கூறலாம்.இதுகுறித்து மைக்ரோசாப்ட் தெரிவிக்கையில், CDC, WHO, ECDC மற்றும் விக்கிபீடியாவிலிருந்து தரவை எடுத்துக்கொள்வதாகக் கூறுகிறது..

Coronavirus Tracker