உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை யாரும் படிக்க முடியாது ? What is the use of WhatsApp two steps verification?

WhatsApp two step verification : How to set up two-factor authentication for your WhatsApp

வாட்ஸ் அப் செயலி நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறிவிட்டது. இதில் வாட்ஸ்அப் என்னதான் பல பாதுகாப்பு அம்சங்களை கொடுத்தாலும் சிறிய குறைபாடுகளும் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

உங்களுடைய கைப்பேசி திருடர்களால் திருடப்பட்டால் அவர்கள் நம்முடைய கைபேசியை ஓபன் செய்து அதில் வாட்ஸ் அப் செயலில் உள்ள தகவல்களை வாசிக்கலாம்.

இதன் காரணமாக உங்களுடைய வாட்ஸ்அப் செயலிக்கு two step verification கண்டிப்பாக செய்யுங்கள். இது செய்வதன்மூலம் உங்களின் சிம் கார்ட் மற்றும் மொபைல் போனை யாரேனும் திருடிச் சென்றாலும் வாட்ஸ்ஆப்பின் தகவல்களை படிக்க இயலாது.

ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த பாஸ்கோடினை உங்கள் வாட்ஸ்ஆப் செயலி உங்களிடம் கேட்கும். இதன் மூலமாகப் உங்களுடைய வாட்ஸ்அப் சரியான நபர்களிடம் இருக்கின்றதா என்பதை வாட்ஸ்அப் சரிபார்க்கும்.

எப்படி WhatsApp two step verification செய்வது ?

உங்களுடைய ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்து Settings > Account > Two-step Verification > Enable இதனை தேர்வு செய்து உங்களின் இருக்கும் ஏதேனும் ஒரு மெயில் ஐ.டி.யை தர வேண்டும். ஒரு வேலை உங்களின் பாஸ்கோடினை நீங்கள் மறந்துவிட்டால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.